10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் நடராசா இராசேந்திரம்
(Owner of Vathani Stores - Sivapuram, Vavuniya)
மறைவு
- 25 OCT 2014
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி:03/11/2024.
யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராசா இராசேந்திரம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு பத்தாகியும்
எங்களால் ஆறமுடியவில்லை
உங்கள் பிரிவால்
வடியும் கண்ணீரும் காயவில்லை
பாசமழை பொழிந்து
நேசமாய் எமை வளர்த்து
துணிவுடனே நாம் வாழ
வழியதனைக் காட்டிவிட்டு
எமைவிட்டு சென்றதெங்கே?
காலங்கள் கடந்து போகும் ஆனால்
கண்மணியே அப்பா உன் நினைவுகள் மட்டும்
காலம்தனை வென்று எம்மிடத்தில் நிற்கும் - எம்
கண்ணிறைந்த கண்ணீரோடு அப்பா...!
இன்றுடன் பத்து ஆண்டுகள் ஓடி
மறைந்தாலும் உங்கள் நினைவுகள்
என்றென்றும் எம்மை விட்டகலாது.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
உங்கள் பிரிவால் வாடும் மனைவி,பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி பெரியப்பா