

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நடராசா இலட்சுமி அவர்கள் 16-01-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாரிமுத்தர் தெய்வானை தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான நாகமுத்தர் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,
பத்மாவதி(இந்திரா- சுவிஸ்) அவர்களின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சத்தியமூர்த்தி அவர்களின் அன்பு மாமியாரும்,
அருந்தவராணி(தவம்), நந்தினிதேவி, காலஞ்சென்ற செல்வராசா, சியாமளாதேவி, சித்திராதேவி ஆகியோரின் அன்புப் பெரியதாயாரும்,
பற்குணராசா, செல்லத்துரை, காலஞ்சென்ற கமலதாசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கனகரெட்ணம், வைத்திலிங்கம், கண்ணம்மா, ஆறுமுகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற ஐயாத்துரை, செல்லப்பா, பூங்காவனம், சின்னையா, அன்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கார்த்திகா, ஜனார்த்தனன், சஜீகா, ஜனகன், ரேகா, பபித்தா, சுவேசன், செந்திரிகா, நவநிதா, தயாரூபன், டினேஸ்குமார், கிரிதர், விதுஷா, நிருஷன், கிருபாகரன், ஜெனிசன், துஷ்யந்தன், கோகுலரூபன், திசாந் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
தனுஷியன், நிக்கிஷா, ஆத்வி, தியாரா, கர்ஷனா, சாயீசன், கஷிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கேரதீவு இந்து மயானத்தி தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.