Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 08 SEP 1995
இறப்பு 24 NOV 2019
அமரர் நடராசா கதீசன் 1995 - 2019 வட்டக்கச்சி இராமநாதபுரம், Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கிளிநொச்சி இராமநாதபுரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நடராசா கதீசன் அவர்கள் 24-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்ரமணியம், கனகமணி தம்பதிகள், காலஞ்சென்ற சூசைமுத்து(மன்னர் மணியம்), பாக்கியம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,

நடராசா(ஒய்வுநிலை அதிபர்- கிளி/இராமநாதபுரம் மகா வித்தியாலயம்) ஆன் புனித ஜெயந்தி(ஆசிரியை- கிளி/இராமநாதபுரம் மகா வித்தியாலயம்) தம்பதிகளின் பாசமிகு சிரேஷ்ட புதல்வரும்,

சியானுகா, பரிதியன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்வராசா, காலஞ்சென்ற யோகராசா(பாபு- மனேஜர்), வரதராசா, விமலராசா, ஜெயராசா(கனடா), புஸ்பகாந்தி ஆகியோரின் அன்பு பெறாமகனும்,

செல்வராணி, சாந்தினி, தேவிகா(கனடா), வசந்தி(ஜேர்மனி), ஜெயந்தி(லண்டன்), சுகந்தி(நோர்வே), காலஞ்சென்ற அல்பேட்(பேபி), காலஞ்சென்ற றொபட்(பபி), எட்வேட்(லண்டன்) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-11-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இராமநாதபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மம்மில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்