1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் திருநாவுக்கரசு நடராசா
வயது 80
Tribute
2
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
திதி: 20-12-2023
யாழ். புங்குடுதீவு 10 ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு குணசிங்கபுரத்தை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Le Blanc-Mesnil ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த திருநாவுக்கரசு நடராசா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று ஆனாலும் உங்கள் அன்பு
முகமும் அரவணைப்பும் உங்கள் நினைவலைகளும்
எங்கள் நெஞ்சை விட்டு அகலவில்லை அப்பா!
தூணாக காலமெல்லாம்
காத்திடுவாய் என இருந்தோம்
காலன் அழைத்தவுடன்
கறைந்ததேனோ காற்றோடு?
வானம் விரிந்திங்கு
வண்ண மழை தூவினாலும்
காணும் உறவெல்லாம்
கைகொடுத்து உதவினாலும்
அப்பா உங்கள் உறவு
இப்போதில்லை என்ற உணர்வு
அனலாய் எறிக்குதப்பா
அகிலமே வெறுக்குதப்பா!
நீங்கள் பூவுலகை விட்டு மறைந்த போதும்
உங்களது ஆத்ம வழிகாட்டலிலும்
உங்களது நினைவுகளுடனும்
எமது வாழ்க்கை பயணம் தொடரும் அப்பா...
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்