Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 15 FEB 1972
இறப்பு 27 FEB 2026
திரு நடராசா சிவகுமார்
வயது 54
திரு நடராசா சிவகுமார் 1972 - 2026 சுதந்திரபுரம், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முல்லைத்தீவு உடையார்கட்டு சுதந்திரபுரம் கொலணியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நடராசா சிவகுமார் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

நாட்கள் 31 கடந்தாலும்
உங்கள் அன்பொழுகும் தங்க
முகம் மறந்தோமில்லை
 இன்றும் உங்கள் பிரிவால்
எம் இதயம் கலங்குகின்றது!

அன்று ஆனந்த மழையில்
 நனையவைத்த எங்களை
இன்று கண்ணீர் மழையில்
நனைய வைத்ததேனோ அப்பா!
ஒளி விளக்காய் இருந்ததெங்கள் குடும்பமின்று
 இருள் சூழ்ந்து கொண்டதேனோ அப்பா!

அன்போடு அணைத்து எம்மை ஆசையுடன்
முத்தமிட்டு ஆசைப்பட்ட அனைத்தையும்
வேண்டி தரும் எம் அருமை
அப்பாவை காண்பதெப்போ!

இறப்பு அனைவருக்கும் நியதி என்றாலும்
உங்களை மனம் ஏனோ ஏற்க மறுக்கிறது
 மறுபடியும் காணத்துடிக்கிறது

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 28-03-2026 சனிக்கிழமை அன்று மு.ப 05:00 மணியளவில் பொக்கணை புனித தீர்த்தக்கரையிலும் வீட்டுக்கிருத்திய நிகழ்வுகள் 29-03-2026 ஞாயிற்றுக்கிழமை மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்திலும் நடைபெற இருப்பதால் அத்தருணம் தாங்கள் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.

வீட்டு முகவரி:
உடயார் கட்டு,
சுதந்திரபுரம்,
கொலணி.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute