எனது பெரியக்கா செல்லம் 94 வயதில் இறவனடி சேர்ந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் கவலை அடைந்தேன். அவர் பிறந்த தேதியான 14/9 லேயே இறைபதம் அடைந்தது அவர் செய்த புண்ணியமாகும். இவர் எனது பெரியம்மா (அம்மாவின் மூத்த அக்கா) வின் மகளாகும். ஊருக்குப் போகும் பொழுதெல்லாம் அவரை சென்று சுகம் விசாரிக்காமல் வந்ததில்லை. அன்போடு உபசரிப்பார். நான் படிக்கிற காலத்தில் எந்த விசேசமானாலும் அவர்களைப் போய்ப் பார்ப்பேன். வருடப் பிறப்பானால் பலகாரமும் கை விசேசமும் தந்து 'தம்பி வா வா' என்று அன்போடு அரவணைத்து உபசரித்து அனுப்புவார். அந்த நாள் நினைவுகள் வந்து என் மனதை இப்போது வாட்டுகின்றன. அவரது இனிய பேச்சும், அன்பான வரவேற்பும், எவரையும் குறை கூறாத பண்பும், வாழும்வரை தன் நற் குலத்தின் பெருமையைப் பேணியதோடு, தான் பெற்ற நன் மக்களையும் நன்றே வளர்த்தெடுத்து, தன் வாழ்நாள் முழுதும் இலட்சியப் பெண்ணாக வாழ்ந்தார். என் பெரியக்கா, மரணத்திலும் துன்பப்படாமல் இலகுவாக உயிர் பிரிந்து இறைவனடி சேர்ந்துவிட்டார். அவரது பாசமான பிள்ளைகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் உறவுகளுக்கும் என்னால் எப்படி ஆறுதல் சொல்லமுடியும்? அவரது ஆத்மா சாந்தியும் சமாதானமும் அடைய இறையருளை வேண்டுகிறேன்.
Our Deepest condolences to you and your family. May her soul rest in peace.