யாழ். மானிப்பாய் நவாலியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நடராஜா இரத்தினம் அவர்கள் 13-05-2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், கந்தையா நாகம்மா தம்பதிகளின் மூத்த புதல்வியும்,
காலஞ்சென்ற நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சிறீஸ்கந்தராஜா மற்றும் சற்குணராஜா, தர்மராஜா, வரதராஜா(கனடா), யோகராஜா, விஜயராஜா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிறிகலா, சந்திரவதனி, பாமா(கனடா), நந்தினி, தர்மினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
இராசமணி அவர்களின் அன்புச் சகோதரியும்,
சதீஸ், தாட்சாயினி, நிதர்சனா, ஜெலக்சனா, ஆரணி(கனடா), கரிஸ்(கனடா), பார்த்தீபன், கயருபன், மிதுசா, கேனுகா, பிரதீப், விதுஷா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-05-2019 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.