

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Toulouse ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா பரஞ்சோதி அவர்கள் 18-09-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா(இராணுவ அதிகாரி) யோகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுசீலாதேவி அவர்களின் அருமைக் கணவரும்,
தனஞ்செயன், தாரணி, தமயந்தி ஆகியோரின் அருமைத் தந்தையும்,
தீபனா, காலஞ்சென்ற சசிமோகன், கிருஷ்ணகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நவமணிதேவி, காலஞ்சென்றவர்களான யோகநாதன்(ரஞ்சி), ஜெகநாதன்(ஜெகன் மாஸ்ரர்) மற்றும் நளாயினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற இராசையா, சியாமளா, சுந்தரகுமார்(கண்ணன்), லிங்கநாதன் பராபரிதேவி, தர்மதேவி, சிவசிறி, தற்பரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற லிங்கேஸ்வரி, செந்தில்நாதன், வன்னியசிங்கம், சிவச்செல்வி, ஜெயசிறி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
சந்தோஷ், மனோஷ், வினோஷ், அனுஷ், சுஜீவன், சஞ்ஜீவன், சுஜீனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
துலூஸ் நகரிலே வாழ்வாங்கு வாழ்ந்து அமரத்துவமடைந்த உங்களது ஆன்மா இறைவன் பாதத்தில் இளைப்பாற பிரார்த்திக்கிறோம். குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.