யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 1ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த நடராஜா கார்த்திகேசு அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 04-07-2024
அன்பின் திரு உருவே
பாசத்தின் பிறப்பிடமே உம்
அன்பு முகம் மறைந்தாலும்
அழியாது நினைவலைகள்
கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே
உங்கள் முகம் என்றும் உயிர் வாழும்
எங்கள் இதயமதில் இறுதி வரை
நிலைத்து நிற்கும் ஐயா
நீங்கள் இறையடி எய்து பத்தாண்டு
நம்ப மனம் மறுக்கிறது
இதயமெல்லாம் வலிக்கிறது
வேரற்ற மரமாய் வேதனையில் துடிக்கிறோம்
ஏன் மறைந்தீர்கள் எங்கள் விடிவெள்ளியே
எங்கள் உள்ளங்களில் அணையா நெருப்பாய்
உங்கள் புன்னகை துளிர்விட்டுத் தளிர்களாய்
எங்கள் இதயங்களில் நனைத்துக்கொண்டே இருக்கும்
ஆண்டுகள் பத்து ஓடி மறைந்தாலும்
என்றும் உங்கள் நினைவுகளுடன்
மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்...