கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nadarajah Kanapathipillai
1958 -
2023
அன்பு நண்பா உன் பிரிவு என்னை ஆறாத் துயரில் கொண்டு சென்று விட்டது. உன்னுடன் புட்டளையிலும், வேலாயுதம் மகாவித்தியாலத்திலும் உன்னுடன் படித்த காலங்களை நினைக்கின்றேன். உனக்கு துவிச்சக்கர வண்டி ஓடப் பழகிய போது நீ விழுந்து விழுந்து பழகியதை நினைக்கின்றேன். பெருமையாக என்னை புகழ்ந்து உன் நண்பர்களுக்கு சைக்கிள் பழக்கியதை சொல்லுவாய். போன மாதம் என்னுடன் கதைக்கும் போது உனக்கு காய்ச்சல் என்று மாத்திரம் சொன்னாய். இப்படி ஒரு கொடிய நோய் இருப்பதை மறைத்து விட்டாய். இல்லாவிடில் உன்னை ஒரு முறை வந்து பார்த்து கதைத்து சந்தோஷப்பட்டிருப்பேன். இப்போது அதை எண்ணி கவலைப்படுகின்றேன். அதற்குள் காலன் உன்னை அழைத்து விட்டான். உன் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றேன் நண்பர். தயாபரன் (மடத்தடி ) குடும்பம்.❤️🇨🇦🙏❤️🇨🇦🙏❤️🇨🇦🙏
Write Tribute
RIP