

யாழ். காரைநகர் வாரிவளவுவைப் பிறப்பிடமாகவும், கருங்காலியை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா கணேசமூர்த்தி அவர்கள் 06-03-2019 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா, லட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவபவானி(லண்டன்), சிவகுமார், சிவதரன், சிவரூபன்(லண்டன்), சிவாஜினி(லண்டன்), சிவகெளரி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சரோஜினிதேவி, காலஞ்சென்ற புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரவீந்திரன், சகுந்தலா, நதீபா, அருள்ராஜா, ஸ்ரீகாந்தன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சோமசேகரம், நடராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கபிலன், குமரன், ஆதவன், கிருஜா, கிருஷாணி, ஹருணி, ஹர்சயன், சதுர்ஷன், ஹரிசன், மதுஷன், ருத்ரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-03-2019 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் கருங்காலியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நீலகிரி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
our condolence to you Bavani and family and RIP.