யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா பாலசிங்கம் அவர்களின் நன்றி நவிலல்.
எங்களது அப்பா நடராசா பாலசிங்கம் அவர்கள் இயற்கை எய்திய துயரச் செய்தி அறிந்த
நாள்முதற் கொண்டு, உலக சமூகம் எதிர்நோக்கும் கொடிய நோயையும் பொருட்படுத்தாமல்
எங்கள் குடும்பத்தின் துயரத்திலும் சோகத்திலும் பங்கேற்று, எம்மை தேற்றியும், எங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை காலநேரம் பாராது வழங்கியதோடு, எம்முடன் தோளோடு தோள் நின்று எம்மை அரவணைத்த அனைத்து நல்லுறவுகளையும் அன்புடன் இருகரம் பற்றிக்கொள்கின்றோம்.
தவிர்க்கமுடியாத காரணங்களால் நேரில் வரமுடியாமல் தொலைபேசி ஊடாகவும், குறுந்தகவல் ஊடாகவும், மற்றும் சமூகவலைத்தளங்களுடாகவும் எமக்கு ஆறுதல் தெரிவித்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
அப்பாவின் இறுதி நிகழ்வுகளை மேம்படுத்திய அப்பாவின் நண்பர்கள் அனைவருக்கும் எமது குடும்பம் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கின்றோம்.