31ம் நாள் நினைவஞ்சலி

அமரர் நடராஜா திலகம்மா
வயது 70
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுழிபுரம் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராஜா திலகம்மா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
மனசு பாரமாய் உள்ளபோது
பரிவுடன் பழக நீங்கள் இல்லை!
ஆற்றல் இழந்த எம் நிலையை
ஊக்கபடுத்த நீங்கள் இல்லை!
எம் தவறுகளை துல்லியமாய்
தடைசெய்ய நீங்கள் இல்லை!
காற்றோடு பூ உறவாடுவதை போல-எங்கள்
மனதோடு மனம் உறவாட நீங்கள் இல்லை அம்மா!
காற்று எத்திசையில் திக்கிமுக்கி திரிந்தாலும்
என்றும் பூவின் வாசத்தை இழக்காது!
நாம் உங்கள் பிள்ளைகள் உங்கள் வாசத்தை தவிர
வேறு சுவாசத்தை சுகிக்கமாட்டோம் அம்மா....!
என்றும் உங்கள் அன்புக்கு ஏங்கும்
கணவர், மகன், மகள், மருமகள், மருமகன்,
பேரப்பிள்ளைகள்.
தகவல்:
குடும்பத்தினர்