5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நடராஜா தனபாலசிங்கம்
பிரபல வர்த்தகர், முன்னாள் வவுனியா நகரசபை உறுப்பினர், வவினியா கோவில் குளம் சிவ ஆலய அன்னதான சபை தலைவர், பரிபாலனசபை நிர்வாக உறுப்பினர்
வயது 68

அமரர் நடராஜா தனபாலசிங்கம்
1951 -
2019
புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
13
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவத்தொண்டர் நடராஜா தனபாலசிங்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
குடும்பம் என்னும் கோயினிலே
மனை சிறக்க வாழ்ந்த எங்கள் அப்பாவே
ஆண்டுகள் ஐந்து போனாலும்
அழியாது உங்கள் நினைவு
எத்தனை ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
அப்பா என்ற உறவுக்கு யாருமே நிகரில்லை
அன்பிற்கு இலக்கணமாய் பண்பிற்கு ஒளிவிளக்காய்
பாசத்திற்கு ஆசானாய் இருந்தீர்கள் அப்பா
காலங்கள் கடந்து சென்றாலும்
ஒவ்வொரு நொடிகளிலும் இதயத்தின் துடிப்பைப் போல்
எங்கள் அருகில் நீங்கள் இருப்பதை
நாங்கள் உணருகின்றோம் அப்பா!
வையகத்தில் நாம் வாழும் காலம் வரை
நெஞ்சத்தில் உங்கள் நினைவு நிழலாடும்
உங்கள் ஆத்மா அமைதி பெற
கண்ணீர் பூக்களை காணிக்கையாக்குகின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்