
திதி: 26-04-2025
யாழ். ஓட்டுமடத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 6ம் வட்டாரம், வில்லூண்றி பிள்ளையார் கோவிலடி, இந்தியா திருச்சி, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த மயில்வாகனம் நாகரத்தினம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலச் சுழற்சியில் பத்தாண்டு
கடந்து போனாலும் இன்னும்
எம் கண்ணீர் மட்டும் ஓயவில்லை
நித்தம் நாம் இங்கு தவிக்கின்றோம்
நீங்கள் இல்லாத துயரம்
வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை
பாசமிகு நிழல் பரப்பிஎங்கள் ஏற்றமிகு வாழ்விற்கு
மெழுகுவர்த்தியாய் தனையுருக்கி
ஒளி பரப்பிய எங்கள் தாயே!
எம்மை எல்லாம் அன்பாலும் பண்பாலும்
அரவணைத்து எம்மை வழிநடத்திய
அந்த நாட்கள் எம் நினைவலைகளில்
என்றும் சுழல்கிறதே அம்மா!
எங்களுக்கான இலக்கணம் படைத்த
உங்களை பத்து அல்ல
பல நூறு ஆண்டுகள்
சென்றாலும் மறக்கமாட்டோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!