
யாழ். இணுவில் தாவடி வடக்கு துரைவீதியைப் பிறப்பிடமாகவும், தாவடி தெற்கை வதிவிடமாகவும், வவுனியா நெளுக்குளத்தை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் காந்தராசா அவர்கள் 15-08-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அம்பிகைபாகன் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பேரின்பமணி(BA தமிழ்- இளைப்பாறிய ஆசிரியை - கொக்குவில் இந்துக் கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,
சண்முகப்பிரியா(லண்டன்), கெளரிவித்தியா(நெளுக்குளம்), திருமாறன்(சித்தி விநாயகர் ஸ்ரோர்ஸ்) சிறிசங்கர் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இராகுலன்(லண்டன்), முகுந்தன்(நெளுக்குளம்), தேவிப்பிரியா(நெளுக்குளம்), பாலகெளரி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(இணுவில்), குலசிங்கம்(கோடிஸ்வரன் ஸ்ரோர்ஸ்) மகேஸ்வரி(கண்டி கலகா, இலங்கை), இலங்கைநாதன்(பிரான்ஸ்), இரத்தினச்சிங்கம்(தாவடி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கஜன்(லண்டன்), காசினி(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 19-08-2019 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் நெழுக்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
My dearest Kumsee (Kumaraswami), I just cannot forget you at any time in my life. You were a great pillar of support for me when we grew up together at Thavady. Unfortunately the time, unfortunate...