

யாழ். இணுவில் கிழக்கு காரைக்கால் சிவன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கே.கே.எஸ் வீதி இணுவில் கிழக்கு மஞ்சத்தடியை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் பரமநாதன் அவர்கள் 04-10-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் றோசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சண்முகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
அகிலன்(ஹொலண்ட்), விஜிதா(ஜேர்மனி), சசிதா(ஜேர்மனி), கேசவன்(செலிங்கோ லைஃவ் யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற சோபிதா, பிரியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கமலினி(ஹொலண்ட்), வசிகரன்(ஜெர்மனி), வரதராஜன்(ஜேர்மனி), அஜந்தா ஆகியோரின் மாமனாரும்,
சிவசுப்பிரமணியம்(சுவிஸ்), இரத்தினபூபதி, இந்திரலீலா, மோகனலீலா, காலஞ்சென்ற சகுந்தலா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரன், மகேஸ்வரன், சிவேஸ்வரி, யோகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான பரஞ்சோதி, பாலசுப்பிரமணியம் மற்றும் புலேந்திரநாதன், வேலு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தயாநிதி, சிவநாதன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
அனுஷன், அபிஷா(ஹொலண்ட்), வர்ஷா, வர்ணி, கனிமொழி, சாய்ராம்(ஜேர்மனி), துளிர்நிலா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-10-2019 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இணுவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.