Clicky

பிறப்பு 22 APR 1944
இறப்பு 27 JAN 2021
அமரர் மயில்வாகனம் நகுலேஸ்வரி
வயது 76
அமரர் மயில்வாகனம் நகுலேஸ்வரி 1944 - 2021 கொல்லன்கலட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Mylvaganam Naguleshwari
1944 - 2021

உங்கள் அம்மா மிகவும் ஆளுமை மிக்கவர், மிகவும் அன்பாகவும், பாசமாகவும் பேசுவார், மிகவும் துணிச்சலானவர், கண்டிப்பாகவும் இருப்பார், 1987-88 வள்ளல் அண்ணா காலத்தில் இருந்து உங்கள் குடும்பத்தை தெரியும். பட்டு மாமாவின் மகன் மோகன் அண்ணையுடன், ஜெயம் அண்ணையுடன், வள்ளல் அண்ணை படித்தவர், அங்கு வருவார். அந்தக்காலத்தில் வள்ளல் அண்ணை, சாம்பசிவம் அண்ணை மகள் பிரதீபா அக்கா இருவரும் கொங்கலட்டியில் அன்று போரளிகளாக பிரபலம். (ஹொட்டல் அடிபாடு. ) நான் 1997 இல் A/L எடுத்துவிட்டு உங்கள் இணுவில் வீட்டில் வைத்து கற்கண்டு, சிங்கத்துக்கு O/L Maths படிபித்தேன். அவர்களை A/L படிக்கவைக்கவும், உதைபந்து அணியில் அவர்களில் தொடர் இருப்பையும் உறுதிப்படுத்த, தன்முனைப்பாக செயல்பட்டேன். பகலில் ரீவி பார்க்காதேங்கோ, கண் தாண்டுப்போம் என்று சொல்லுவார். பின்னர் அளவெட்டி வீட்டுக்கும் இடைக்கிடை சென்று வருவேன். 2004 இல் வீட்டுக்கு போனபோது, என்ன நீ இன்னாரை காதலித்திருக்கிறீராமே என்று கேட்டார், மகிச்சியைடந்தார். 2008 ஜனவரியில் என் திருமணத்துக்கு அழைப்பு விடுக்கச்சென்றேன். கடந்த 12 ஆண்டுகள் சிங்கப்பூரில் இருப்பதால் அவரைக் காணமுடியவில்லை.

Write Tribute

Tributes