யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மயில்வாகனம் மகாலிங்கம் அவர்களின் 20ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 19/11/2022.
அனைவரிடத்திலும் அன்போடும்,
பண்போடும் பாசத்தோடும்,
கடமை, கண்ணியம்,
கட்டுப்பாட்டுடன் நல்வழிகாட்டி
எங்களை வளர்த்தெடுத்த
எமதருமை ஐயாவே..!
வானத்தை விட்டு நிலவையும்
வாசத்தை விட்டு மலரையும்
பிரிக்க முடியாது- அதுபோல
உங்கள் நினைவுகளை- எங்கள்
நெஞ்சை விட்டும் விலக்கமுடியாது
ஆண்டுகள் இருபது முடிந்தாலும்
எங்கள் இதயங்களிலிருந்து
அகலாது உங்கள் நினைவுகள்..!
இன்னும் எத்தனை ஆண்டுகள்
ஆனாலும் உங்களின் நினைவுகளோடு
வாழ்ந்திடுவோம் நாங்கள்..!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் 20ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு 19-11-2022 சனிக்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற உள்ளதால் அத்தருணம் தாங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளும் வண்ணம் தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
முகவரி:-
“திருவேரகம்”
05ம் வட்டாரம்,
நயினாதீவு.