10ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
5
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
திதி:30/03/2026
யாழ். அல்வாய் மேற்கு திக்கத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Kent Sheerness ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மயில்வாகனம் அகிலன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆறாத துயரம் கண்டோமே ஆண்டவரே!
எம் ஆருயிர் துணைதனை இழந்து!!
ஆண்டு பத்து ஆனதுவோ
உங்கள் முகம் கண்டு
ஏற்க முடியவில்லை உங்கள் இழப்பை
எம் கண்களில் ஈரம்
நிரந்தரமானதோ என்னவோ
இன்னமும் காயவில்லை அப்பா!
கணப் பொழுதும் எண்ணவில்லை
எம் கலங்கரை விளக்கே!
சுவாசிக்க சுவாசம் இல்லை
நேசிக்க யாரும் இல்லை
நெஞ்சம் எல்லாம் வலிகளுடன்
நிஜங்களைத் தேடுகின்றோம்
உங்கள் நினைவுகளில்
எம் கண்கள் உடைந்து
கண்ணீர் இன்றும் பெருகுதையா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்
We are missing you Agilan, His memories from our village and our early school days always with us. May his soul rest In Peace.