15ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் முத்தையா தங்கராசா
1950 -
2010
சங்கானை, யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
சங்கானை ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும் தற்பொழுது இந்தியா விருத்தாச்சலத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முத்தையா தங்கராசா அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி : 08-11-2025
எங்கள் அன்புத் தந்தையே!
ஆண்டு பதினைந்து மறைந்தாலும்
ஆறிடுமா எங்கள் துயரமய்யா?
நிழல் தந்து எமை வளர்த்து
நிலைத்து மண்ணில் வாழ வைத்து
உறுதியுடன் எம்மைக் காத்த
உத்தமனே எங்கள் அன்புத் தெய்வமே!
ஒரு மலராய் மலர்ந்து
பலர் வாழ மணம் வீசிய தந்தையே
என்றும் அழியாத உம் பாசம்
எம்மை விட்டு அகலாது அப்பா
காலத்தின் சக்கரங்கள்
கடுகதியில் சென்றாலும்
கடந்து வந்த பாதையிலே
நினைவலைகள் தொடரட்டும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்