Clicky

24ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 28 AUG 1939
இறப்பு 20 OCT 2000
அமரர் முத்துவேலு வைத்தீஸ்வரன் 1939 - 2000 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ் ஆகிய நகரங்களில் வசித்தவருமான முத்துவேலு வைத்தீஸ்வரன் அவர்களின் 24ம் ஆண்டு நினைவஞ்சலி.   

வாழ்க்கை என்பது இறைவன் அவன்
வகுத்த வரைதானே அடுக்கடுக்காக
ஆண்டுகள் 24 சென்றன
அருகில் நீங்கள் இல்லாததால்
உங்கள் அன்பு தனை இழந்தோமே நாம்!

அடுத்தொரு பிறப்பு உண்டென்றால்
அப்பொழுது மட்டுமல்ல- ஏழேழு
பிறப்பிலும் எமக்கே அப்பாவாய்
பிறந்திட வேண்டுகிறோம் அப்பா!

வானத்தை விட்டு நிலவையும்
வாசத்தை விட்டு மலரையும்
பிரிக்க முடியாது- அதுபோல
உங்கள் நினைவுகளை- எங்கள்
நெஞ்சை விட்டும் விலக்கமுடியாது

நெஞ்சில் உங்கள் நினைவுகளை சுமந்தே
நெடுங்காலம் நாம் இங்கே
நிலைத்து வாழ்வோமே
வானில் விண்மீனாய் இருந்து
எம் வாழ்வை வளப்படுத்துவீரே!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

உங்கள் பிரிவால் துயரும்
அன்பு மனைவி, பிள்ளைகள், மருமக்கள்
மற்றும் பேரப்பிள்ளைகள்..!

தகவல்: தவசீலன்(மகன்- சுவிஸ்)