யாழ். சுன்னாகம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட முத்துவேலு லோகேஸ்வரன் அவர்கள் 26-02-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துவேலு கண்மணி(நாகம்மா) தம்பதிகளின் அன்பு மகனும்,
சுகுணாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
பங்கையச்செல்வன், செந்தூர்ச்செல்வன், லக்சாயினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
யோகேஸ்வரா, கோணேஸ்வரன் , லோகசாலினி, யோகமாலினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்
கமலேஸ்வரி, ராணி, குமாரசாமி, அருமைத்துரை, கந்தசாமி, சத்தியறஞ்சன், தவநாதன், லோகிணிதேவி, றஞ்சினிதேவி, கருணாதேவி, சுபத்திராதேவி, லோகநாதன், குலசிங்கம், றவீந்திரன், றமணி, ரூபராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிஷாந்தினி, சிறாணி, விஸ்ணு, தாரணி, பிரசாந்தி, கெளதமி ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
ஜெயக்குமார், ஜெயந்தா, ஜெனிதா, சீலன், சூட்டி, சதீசன், றமேஸ், சங்கீதன், கபிலன், கவிதா, கம்சிகா, சுஜிதன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, உருக்குமணி மற்றும் சுந்தரம் ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
சரவணப்பிரசா, சபீஸ்கண்ணா, மயூரி, சோபனா, தயானந்தன், சுகந்தி, மகிந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கலைச்செல்வி, சிவச்செல்வன், கலைவதனி, உமாச்செல்வன், துளசிச்செல்வன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
கீர்த்தன், மகிஷா, மகிதா, மகிஷன், டிலக்ஷனா, தனுஷன், ஆதி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.