![](https://cdn.lankasririp.com/memorial/notice/202597/88d4632d-a6af-41ec-84ec-e8e1e0c04da2/21-6066e4bd99d16.webp)
யாழ். பெரியபளையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தை வசிப்பிடமாகவும், கொடிகாமத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட முத்துவேலு கந்தசாமி அவர்கள் 17-07-2020 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துவேலு செல்லம்மா மற்றும் மகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு இளைய மகனும், காலஞ்சென்ற பரநிரூபசிங்கம், தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தராதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
பிரதீபா, பமிலா, பிரசன்னன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செல்வக்குமார், வசீகரன், சோபன்ஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற செல்வராசா, நவரட்ணராசா மற்றும் செல்வராணி, சரஸ்வதிதேவி, சிறிஸ்கந்தராசா, ராஜேஸ்வரி, யோகராசா, யோகேஸ்வரி, ஜெகதீஸ்வரி, சக்திவேல், ஈஸ்வரி, சித்திரவேல், ரேவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அபிதாப், அபிசாரங்கன், அபிசாதனா, சகாஷ், பமீஷ், அனன்ஜா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் “கந்தன் குடில் ” கச்சாய் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பாலாவித்தாள் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.