10ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
கண்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும், தற்போது லண்டன் Stoke Newington ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த முத்துச்சாமி ஆறுமுகம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு 10 சென்றாலும்
உங்களை இழந்த துன்பமும் துயரமும்
எங்கள் மனதை விட்டு மறையவில்லையே!!
எம்மை படைத்த எம் குலதெய்வமே
பணிகின்றோம் உங்கள் பாதம் தொட்டு
அன்பு பெருக அணைத்த கரங்களும்
நாம் ஆழ்ந்து உறங்கிய பாச மடியும்
இன்பம் தரும் தங்கள் இனியசொற்களும்
இன்றியே நாங்கள் இயல்பிழந்தோம் அப்பா!!
வாழ்க்கை என்னும் பாதையிலே
எம்மோடு பயணித்த தெய்வமே!
பிறந்த மண்ணிலிருந்து நீங்கள் மறைந்தாலும்
எங்கள் நினைவில் என்றும்
நீங்காது வாழ்கின்றீர்கள் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்