
யாழ். மண்டைதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துலட்சுமி பத்மநாதன் அவர்கள் 10-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதர் தில்லைவனம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதன் சிவயோகம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற பத்மநாதன்(பாலு) அவர்களின் அன்பு மனைவியும்,
திருமகள், காலஞ்சென்ற திருவருள் மற்றும் திருவாசுகி, திருவருட்செல்வன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கிருபாகரன், கிருஸ்ணேஸ்வரன், சாந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லையா, அன்னப்பிள்ளை, லெட்சுமியம்மா, சிவசுப்பிரமணியம், அப்பாத்துரை, அப்பாப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நீருஜா, அஸ்மிரா, சந்தியா, விதுஜெனன், தனுசியா, மதுவந்தி, கேசிவாஸ்வன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-12-2019 புதன்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
RIP