

யாழ். வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், நடராசா வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முத்துக்குமாரு தங்கவேல் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
முதலாம் ஆண்டு நீங்கா நினைவுகள்
கரப்பந்தாட்ட வீரராகவும் உதைப்பந்தாட்ட வீரராகவும்
அனைத்து தடகள போட்டி வீரராகவும்
தாயக பற்றுடையவராகவும்
தன்னுடைய ஊர் மீது நேசம் கொண்டவராகவும்
தொடர்ந்து 72 வயது வரை ஓயாது
மக்களுக்காக உழைத்து தொண்டராகவும் வாழ்ந்து
தன்னுடைய வாழ்க்கையை நிறைவு செய்து
இன்றோடு ஆண்டு ஒன்று ஆனதோ
தங்கண்ணா என்றும் தங்கப்பா என்றும்
தங்கவேல் அண்ணா என்றும்
வல்வையில் உம்மை அன்போடு அழைப்பார்களே
இன்று எல்லோரும் அழைக்கிறோம்
எங்கள் குரல் கேட்காமல்
எங்கே சென்று விட்டீர்கள் ஐயா!
வல்வையின் அனைத்து கழகங்களையும்
வளர்த்ததுடன் விளையாட்டுத்துறைக்கு
தன்னுடைய வாழ்வையே அர்ப்பணித்தவரே
ஆண்டுகள் பல கடந்தாலும்
காலமெல்லாம் வரைந்து வைத்த ஓவியமாய்
எங்களுடனே வாழ்ந்திடுவீர்கள்
மீண்டும் நீங்கள் வருவீர்கள் என வழி பார்த்திருந்தோம்
விண்மீன்களாய் தான் தெரிகின்றீர்கள்
உம்மோடு வாழ்ந்த காலங்களை நினைத்தால்
ஒருமுறை செத்து உயிர்க்கின்றோம்
நீர் இருக்கும் இடத்தைவிட
எங்கள் இதயம்தான் உங்கள் இருப்பிடம்
மீண்டும் நீர் வரமாட்டீரா
என்று ஏக்கத்தோடு வாழ்கின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கும்
குடும்பத்தினர்
தங்கவேல் சந்திரவதனா
பாலேந்திரன் சாந்தி(கனடா)
தங்கவேல் முத்துகுமரன்(பிரித்தானியா)
யோகேஷ்வரன் பிரியா(பிரித்தானியா)
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும். பிறருக்காக வாழ்ந்த ஆத்மா பிறவிப் பயன் எய்துவார். குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களும் ஐயாவிற்கு ஆத்ம சா ந்திப் பிரார்த்தனைகளும்