

யாழ். நெடுந்தீவு கிழக்கை பூர்வீகமாகவும், செட்டிக்குளம் 2ம் பாமைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Lyon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமார் சாந்தகுமார் அவர்கள் 25-08-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துக்குமார், கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வன்னியசிங்கம், மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஆதிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
தினேஷ்குமார்(காசி), தானுப்பிரியா(தானு), புறுசிகா(நிலா), றம்மியா, சுறுதிகா(சுறு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
உருத்திராதேவி(பேவி), மனோறஞ்சினி(பிறின்சி), விஜயகுமார்(துரை), விமலாதேவி(விமோ), கலையரசி(கலா), உதயக்குமார்(உதயன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்.
லக்கி, அனித்திரா ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும்,
கஜேந்திரன், செந்தில்நாதன், தயாழினி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.