Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 12 OCT 1929
மறைவு 20 AUG 2009
அமரர் முத்துப்பிள்ளை கெசபதி
ஆவணி பூர்வபக்க பிரதமை
வயது 79
அமரர் முத்துப்பிள்ளை கெசபதி 1929 - 2009 காங்கேசன்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த முத்துப்பிள்ளை கெசபதி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

அம்மாவுன் மடியில் வாழ்ந்த
அந்நாட்கள் போல வருமா
இம்மா உலகம் ஆளும்
இன்பமும் இன்பம் தருமா
சும்மாவா சொன்னார் தாய்மடி
சொர்க்கம் என்று?ஐயோ
அம்மா நீ போன போதே
ஆசையும் போச்சே போச்சு!

மறதியால் எதையும் மறப்போம்
மறந்தும் நாம் உன்னை மறவோம்
பிறவி நீ எடுத்தாற் கூடப்
பிள்ளையாய் பிறக்கக் கேட்போம்
உறவிலும் உன்பேர் காத்து
உள்ளநாள் வரையில் வாழ்வோம்
அறம்பொருள் இன்பம் வீடு
அம்மாவின் நினைவில் காப்போம்

ஆண்டுகள் எத்தனை போனாலும்
பாசப் பிணைப்பினாலா
நாம் பலரும் தவிக்கின்றோம்
இல்லத்தின் சுடரொளியாய்
வையத்தில் வாழ்ந்த

உங்கள் அன்புள்ள ஆத்மாவின்
சாந்திக்காய் வேண்டுகின்றோம்!

அன்னாரின் திதிக்கிரியை 31-08-2019 சனிக்கிழமை அன்று கீரிமலை மண்டபத்தில் கிரியையும், அன்னதானமும் நடைபெறவுள்ளது இந்நிகழ்வில் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் தனிப்பட்ட அழைப்பாக ஏற்று வருகை தருமாறு அழைக்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர்