யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த முத்தையா சுபேந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 29-01-2022
ஆண்டு ஒன்று ஓடி மறைந்தாலும்
தங்களின் பிரிவை இன்னும்
எங்களால் நம்ப முடியவில்லை...
சிரித்துப்பேசி மகிழ்ச்சியுடன்
உறங்கச் சென்ற உங்களை
காலனவன் காத்திருந்து
அதிகாலை வேளையில்
நோகாமல் காவு கொண்டானே....
தங்கள் கலகலப்பான சிரிப்பினாலும்
அனைவருடனும் அன்பாகப்
பழகும்
தன்மையினாலும்
அனைவர் உள்ளத்திலும்
இடம்பிடித்தீர்கள்....
என்செய்வோம்...
ஆண்டாண்டு தோறும்
அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ
மாநிலத்தீர் என்பதை
மெய்யாக்கிச்
சென்றுவிட்டீர்கள்..
தங்கள் திருவுருவம் மறைந்தாலும்
உங்கள் உயிர் எப்போதும்
எங்களோடுதான் இருக்கின்றது
அன்புத் தெய்வமே!
ஆண்டுகள் எத்தனையானாலும்
நித்தம் உங்கள் நினைவுகளோடு
தம் பாதமலர் பணிகின்றோம்....
தங்கள் ஆத்மா குழந்தை வடிவேலன்
தல்லையபற்று முருகனின்
திருவடிகளில் அமைதிபெற
வணங்குகின்றோம்..
My deepest condolences and sympathies to the family.