30ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் முத்தையா சண்முகராஜா
சர்வதேச தொலைத்தொடர்பாளர், குளோபல் கொம்யூனிகேசன்ஸ் பிரைவேட் லிமிடெட், குளோபல் கூரியஸ் பிரைவேட் லிமிடெட், குளோபல் பிஸ்னஸ் சேவிஸ் பிரைவேட் லிமிடேட் ஆகியவற்றின் ஸ்தாபகர்
வயது 55
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த முத்தையா சண்முகராஜா அவர்களின் 30ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்ணுக்கு ஒளியாய் நெஞ்சத்தில் நினைவாய்
நிலையாய் என்றும் எங்களோடு
எங்களின் இறைவனாய்- என்றும்
எங்களை வழிநடத்த வணங்குகிறோம்.
முப்பது ஆண்டுகள் போனாலும்
முப்பது நிமிடங்கள் போல் உள்ளதப்பா..!!
மறப்பதற்கு மனதிலும் இழப்பதற்கு
இதயத்திலும் வைக்கவில்லையப்பா
உயிராய் வைத்திருக்கின்றோம்..!!
நாம் இருக்கும் வரை உங்கள்
நினைவலைகள் எங்களுக்குள் அழியாமல்
இருக்க வேண்டும் என்பதால்
வாழ்நாள் முழுவதும் நினைக்கும்
போதெல்லாம் உங்கள் நினைவுத் துளிகள்
விழிகளின் ஓரம் கண்ணீராய்
கரைகின்றதப்பா..!!
உங்கள் அன்புள்ள ஆத்மாவின்
சாந்திக்காய் வேண்டுகின்றோம்!
தகவல்:
மனைவி, பிள்ளைகள்