1ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 26 MAR 1943
விண்ணில் 18 AUG 2021
அமரர் முத்தையா நாகரத்தினம் (பொன்னையா, J. P)
வயது 78
அமரர் முத்தையா நாகரத்தினம் 1943 - 2021 புங்குடுதீவு 4ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், தற்போது கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முத்தையா நாகரத்தினம் அவர்களின் 01ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பின் திருவுருவே
பாசத்தின் இருப்பிடமே
 குடும்பத்தின் குலவிளக்கே,
 தன்னையே தீபமாக்கி
 தரணியில் எம்மைக் காத்த
 தெய்வத்திற்கு அவனிதன்னில்
அர்ப்பணம் எதைத்தான்
செய்வோம் நேற்றுரை
நிம்மதியாய் எம் விழிகள்
 இன்று உங்களை எண்ணி
 நீர்நிறைந்து நிற்கின்றதே

நேசம் காட்டி எமை வளர்த்து
 இன்று நிர்க்கதிக்குள்
ஆக்கிவிட்டு மறைந்துவிட்ட
 எம் குலவிளக்கே. எம்மைவிட்டு
சென்ற பிரிவு அதன் வலிகள்
 தனை பின்னர் தான் உணர்ந்து
 கொண்டோமப்பா கண்ணை
 இமை காப்பது போல் எம்மை
 காவல் காத்த எம் தெய்வமே
 கலையாத உன் முகமும் கள்ளமி்ல்லா
உன் சிரிப்பும் காண்பது
எப்போது? அப்பா, ஆயிரம்
 ஆண்டுகளானாலும்

உங்கள் நினைவுகளுடன்
ஆத்மா சாந்தியடைய
 பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 21 Aug, 2021