யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட முதலித்தம்பி சண்முகநாதன் அவர்களின் 28ம் ஆண்டு நினைவஞ்சலி.
வவுனியா பொது நூலகத்தின் அதிபராகவும், அகில இலங்கை சமாதான நீதவானாகவும், வவுனியா நகரசபையில் ஐக்கிய தேசியக் கட்சியின் முதல் தமிழ் உறுப்பினராகவும் சிறப்புடன் பணியாற்றியவர். அக்காலப்பகுதியில் பல்வேறு சமூக அமைப்புகளின் தலைவராகவும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றினார். குறிப்பாக, கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவராகவும், வவுனியா மகாவித்தியாலய அபிவிருத்திச் சங்கத் தலைவராகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஆரம்பகால உறுப்பினராகவும் இருந்து, 1980, 1990 மற்றும் 2000களில் வவுனியா மாவட்ட மக்களுக்கு அளப்பரிய சேவைகளை ஆற்றியவர்.
உங்கள் உயர்ந்த பண்புகளையும்,
சமூக சேவைகளையும்,
புகழையும் தினந்தோறும்
போற்றி நினைவுகூர்கிறோம்.
எங்கு இருந்தாலும் எங்களை காத்திடுங்கள்.
உங்கள் ஆன்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகிறோம்.
நினைவுகூர்பவர்கள்
மனைவி – திருமதி சண்முகநாதன் 🇨🇦
மகன் – சுரேஷ் 🇨🇦
மகள் – சுமதி 🇨🇦
தங்கை – சத்தியபாமா 🇨🇦
தம்பி – சிவநாதன் 🇬🇧
தங்கை – சத்தியவதனா 🇨🇭
தங்கை – சுஜாதா 🇬🇧
நண்பர்கள்
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details