21ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
வவுனியா ஓமந்தை, நாம்பன்குளத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா பொன்னகம் தாண்டிக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முத்தையா பொன்னம்பலம் அவர்களின் 21ம் ஆண்டு நினைவஞ்சலி.
அப்பா
61 ஆம் வயதிலும்
21ன் இளவலாய்
21 ஆண்டுகளின் முன்
உடல் துறந்து
என்றும் வாழும் நித்தியமானீர்கள்
இந்த 21 ஆம் நூற்றாண்டில்
எமக்கு இணையற்ற அதிசயம்
நீங்கள்தான்...
வசீகரமான வாழ்வியல்
ஒன்றை வடித்தவர் நீங்கள்
மனத்தின் திடத்தால்
எண்ணம் போல் எழுந்து வாழ்ந்தீர்கள்
நாளெல்லாம் செயலால் பேசிய
உங்கள் நிமிர்ந்த மொழிகள்
காலைகள் ஒவ்வொன்றிலும்
எம்கண்களில் தெரிவதால்
துவளாத உளம் கொண்ட
வரம் பெற்று நிமிருகின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்