மரண அறிவித்தல்

Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட முத்தையா குகதாஸன் அவர்கள் 23-01-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், முத்தையா சின்னராசா அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று சங்கானையில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பாசத்தின் உறைவிடமே பண்பின் ஒளிவிளக்கே
உற்றார் சுற்றமும் கூடிக்கழித்த உறவுகளை
கைவிட்டுச் சென்றதேனோ
பிரிவால் வாடி நிற்கின்ற உள்ளங்கள்
தேற்ற மொழியின்றி தவிக்கின்றதே
நின் உறவின் அடி தேடித் துடிக்கின்றதே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிராத்திக்கின்றோம்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!!
தகவல்:
முத்தையா சின்னராசா(கிளி-சகோதரர்)