Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 19 JUN 1933
இறப்பு 18 FEB 2012
அமரர் முத்தையா ஞானேஸ்வரி
வயது 78
அமரர் முத்தையா ஞானேஸ்வரி 1933 - 2012 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு 8ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா ஞானேஸ்வரி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

உதிரத்தைப் பாலாக்கி ஊட்டியவள்!
உதிரமெல்லாம் பாசத்தை ஏந்தியவள் எம் தாய்!
தொட்டிலில் இட்ட அன்னையை
 பத்தாண்டு தாண்டியும் அழுகின்றோம்!

எல்லோர் மனதிலும்
 என்றும் அணையாத சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!

ஆண்டுகள் பத்து அகன்றே நின்றாலும்
அழியாத நினைவலைகள்
எம் அகத்தில் நின்று ஆழத்திலே
 வாட்டி வதைக்கின்றது அம்மா!

எம் வாழ்க்கையின் வேராய் வாழ்ந்தவள் நீ
வாழ்க்கையில் ஒப்பிடா வேறாய் விளங்குபவள் நீ
 உடலுக்குள் உயிர்வளர்த்த கடவுள் நீ
பத்துத்திங்கள் எம் சுமைதூக்கிய சுமைதாங்கியும் நீயம்மா!

ஆயிரம் ஆண்டுகள் அடுத்தடுத்து வந்தாலும்
 ஆழிசூழ் உலகில் அன்னை உன் நினைவு மங்கிடுமோ?
நீ தந்த பாசத்தை இவ்வுலகில் எமக்கினி யார் தருவார்?

உங்கள் ஆத்மா சாந்தியடைய அன்னையின் காலடியே
சொர்க்கம் என்ற உண்மையினை இதயத்தில் ஏற்றி
 நாளும் இறைவனை வேண்டுகின்றோம்! 

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices