

அமரர் முத்தையா செல்லையா
பிறப்பு :
22 Nov, 1927 - இறப்பு :
02 May, 2015
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த முத்தையா செல்லையா(மாஸ்டர்) அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அமரர் செல்லையா இராசம்மா
பிறப்பு :
11 Oct, 1931 - இறப்பு :
18 Apr, 2022
யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், அளவெட்டியை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லையா இராசம்மா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் தாய் தந்தையே உங்களைப் பிரிந்து
பல ஆண்டுகள் கடந்ததுவே!
அருள் விளக்கே நீங்கள் அணைந்தது
சில நாழிகை போலன்றோ!
சிந்தனையில் தோன்றுதே அம்மா! அப்பா!
நீங்கள் எமை விட்டுப் பிரிந்தாலும்
நித்தமும் உங்கள் நினைவு நெஞ்சில் நிழலாடுது
எம் சொப்பணத்தில் நீங்கள் சோதி வடிவாகி வந்து
அற்புதங்கள் பல புரிகின்றீர்கள்...
அரும்பசி வந்தபோது அம்மா உன் நினைப்பு
ஆற்றா நோய்க்கும் நீயே தானேயம்மா மருந்து
ஆயிரம் உறவுகள் பூமியில் இருந்தும் என்ன
தந்தையே உனக்கு ஒப்பாகுமோ ஓர் உறவு...
மனதோடு எமை சுமந்து பிரிவோடு துயர் தந்து
ஆண்டுகள் பல ஆனாலும்
ஆறாது உங்கள் இழப்பின் துயர் -எம்
நெஞ்சை விட்டு நீங்காது உம் இருவர் நினைவு
உங்கள் ஆத்மா சாந்தியடைய
என்றும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
அம்மா, அப்பா...