
மடக்கும்பர, வட்டகொடையை பிறப்பிடமாகவும், அல்விஸ் டவுன், வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா சண்முகம் அவர்கள் 12-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி முத்தையா தம்பதிகளின் அன்புப் புதல்வனும், திரு.திருமதி தங்கசாமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவகாமி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற கருப்பண்ணன் சேர்வை(பெரியப்பா), செல்லச்சாமி CWC(சித்தப்பா), சிவராஜா, சந்திரகாந்தி, இராஜகுமாரி, சர்மிளா ஆகியோரின் அன்பு தந்தையும்,
பிரபாகரன், இராஜேந்திரன், உதயமனோகரி, நாகபூஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
செளமியா, ஹர்ஷன்யா, மதூஷிகா, விகாஷ், யரோஷித், யுகாஷ், கெளஷிக் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
சங்கரலிங்கம், சித்ரசேனன், விஜயரட்ணம், சிவபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குணவதி, கிருஷ்ணவேணி, பாக்கியவதி, ஜெயராம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 14-11-2019 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கெரவலபிட்டிய பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.