கொழும்பைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டை விதானையார் வீதி, இல.6, 2ம் குறுக்குத் தெரு, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முத்தையா இராஜேஸ்வரி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓர் ஆண்டு ஒரு நொடிப் பொழுதில் ஆனதம்மா
உங்கள் இழப்பை எம்மால் நம்பவே முடியவில்லை
ஓர் ஆண்டு கனப்பொழுதில் உருண்டோடி விட்டதம்மா
உங்கள் பிரிவு எம் மனதை வாட்டுதம்மா
பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில்
மனம் ஆயிரம் கனவுகள் காண
வாழ்வுக்கும் தாழ்வுக்கும் நடுவில்
விதி எங்கே எப்போது எந்த
உருவத்தில்
நுழைந்தது என்று
யாருக்கு தெரியும் அம்மா
உங்கள் பிரிவுக்கும் அந்த காலன்
அவன்
என்ன உருவத்தில் நுழைந்தானோ
எங்கள் அம்மாவின் உயிரைப் பறிப்பதற்கு
உங்கள் பிரிவுச் செய்தி இன்றும்
ஆணிவேராய்
அடிமனதில் பதிந்ததம்மா
எங்களால் மறக்கவே முடியவில்லை
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
பெரியம்மாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.