யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், தற்போது கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா கிருஸ்ணபிள்ளை அவர்கள் 16-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா, தங்கம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை சின்னம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும்,
காலஞ்சென்ற நீலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான நல்லம்மா(இராசமணி), கனகம்மா, துரையப்பா, கணேசமூர்த்தி(துரைச்சாமி) மற்றும் பாக்கியம்(பிள்ளையம்மா- பிரான்ஸ்), நாகரத்தினம்(J.P கொழும்பு), சிரோன்மணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதன், குருபரநாதன், புவனேஸ்வரி(கமலா) மற்றும் சிவநேசன், குமரையா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சிவகாமிப்பிள்ளை, பத்மராணி, கலைவாணி, நந்தகுமாரி, காலஞ்சென்ற கந்தையா ஆகியோரின் அன்புச் சகலனும்,
காலஞ்சென்ற கணேசு, கணபதிப்பிள்ளை, நல்லையா, ஏகாம்பரம்(சாம்பு), பரமேஸ்வரி, சுபத்திரை(கொழும்பு), தங்கமணி(கிளி- டென்மார்க்), காலஞ்சென்ற இராமலிங்கம், கணபதிப்பிள்ளை, தர்மலிங்கம், ஆறுமுகம்(பிரான்ஸ்), செல்லத்துரை ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 19-02-2020 புதன்கிழமை அன்று பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 20-02-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.