
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி இராமநாதபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முருகேசு மருதையினார் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்.
தூக்கி வளர்த்த பிள்ளைகள் பேரர்கள் எல்லாம்
கதிகலங்கி கண்ணீரை சொரிந்து நிற்க
விண்ணுலகம் விரைந்தீரோ ! எங்கள் தாத்தா !
விம்மிவிம்மி அழுதென்ன லாபங்கண்டோம்
ஆறாத துயரமதை இதயம் சுமக்க
அலைமோதும் கடலெனவே கண்ணீர்பெருக !!
தரணியிலே நீர் தந்த அன்பு பாசம்
சரித்திரத்தில் மாறாத நினைவோடு
நேரான சிந்தனையில்
நாமும் வாழ்வோம் நிலையாக
உங்கள் ஆத்மா சாந்தி கொள்ளும்
மக்கள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் !!
எங்கள் தந்தையாரின் மறைவுத்துயரில் பங்கெடுத்த அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவிப்பதுடன் 09-05-2019 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய நிகழ்விலும் கலந்து சிறப்பிக்குமாறு வேண்டுகின்றோம்.