Die Bibel Parisuththa. Verkam. ( 22 )ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள். (1 கொரிந்தியர் 15:22) (42) மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். அழிவுள்ளதாய் விதைக்கப்படும், அழிவில்லாததாய் எழுந்திருக்கும். (1 கொரிந்தியர் 15:42) (43 )கனவீனமுள்ளதாய் விதைக்கப்படும், மகிமையுள்ளதாய் எழுந்திருக்கும். பலவீனமுள்ளதாய் விதைக்கப்படும், பலமுள்ளதாய் எழுந்திருக்கும். (1 கொரிந்தியர் 15:43) (44 )ஜென்மசரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும். ஜென்மசரீரமுமுண்டு, அவிக்குரிய சரீரமுமுண்டு. (1 கொரிந்தியர் 15:44) (52 )எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள். நாமும் மறுரூபமாக்கப்படுவோம். (1 கொரிந்தியர் 15:52) (55 )மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே? (1 கொரிந்தியர் 15:55) 23 அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான். முதற்பலனானவர் கிறிஸ்து. பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள். 1 கொரிந்தியர் 15:23