யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், மண்கும்பான் மேற்கை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு நாகரத்தினம் அவர்களின் நன்றி நவிலல்.
தாயாய், தந்தையாய் பாசத்தை ஊட்டி வளர்த்த
எம் தந்தையே, எம்மோடு நீங்கள் வாழ்ந்த
காலம் முடிந்தது என்று விண்ணுலகம் சென்றீரோ!
துயரம் தாங்க முடியவில்லை ஐயா! நீஙகள்
எம்மோடு இல்லையென்று நினைக்கையில்!
முன்பு நாம் அழும் போதெல்லாம் அரவணைத்து நின்றீரே
இப்போதும் நாம் அழுகின்றோம் அரவணைக்க நீங்கள் இல்லையே ஐயா, உம்மோடு நாம் வாழ்ந்த பசுமையான
நினைவுகள் வந்து எம் நெஞ்சத்தை வாட்டுதே!
கண்ணீரில் மிதக்கின்றோம் ஆறுதல் தர வாராயோ?
ஐயா நீர் எம்மோடு இல்லையெனும் உண்மையை
ஏற்றுக்கொள்ள எம் மனம் மறுக்குதே!
தினமும் எம் கண்கள் உம்மைத் தேடுகிறது ஐயா
ஒருமுறை வாராயோ பதில் ஒன்று தாராயோ!
கொரோனாச் சூழலில் நீர் விண்ணுலகம் சென்றதால்
உம் கடமை கூட முழுமையாகச் செய்ய
முடியாததை இட்டு எம் மனது துடிக்குதே ஐயா!
என்றும் உம் நினைவுடன்
உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கும்
குடும்பத்தினர்...
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.