10ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். கரவெட்டி தல்லையப்புலம் துன்னாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா wembley ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முருகேசு நடராசா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி : 22/06/2024
கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே
உங்கள் முகம் என்றும் உயிர் வாழும்
எங்கள் இதயமதில் இறுதி வரை
நிலைத்து நிற்கும் அப்பா
நீ இறையடி எய்து பத்தாண்டு
நம்ப மனம் மறுக்கிறது
இதயமெல்லாம் வலிக்கிறது
வேரற்ற மரமாய் வேதனையில் துடிக்கிறோம்
ஏன் மறைந்தாய்? எங்கள் விடிவெள்ளியே!
மீளவும் பெற முடியுமா நீ
எம்மோடு கூடிக்குலாவிய நாட்கள்
ஒன்றென்ன பல தசாப்தங்கள்
கடந்து சென்றாலும் எம் நெஞ்சை
விட்டகலா உம் நினைவுகள்
எத்தனை கனவுகள் கண்டிருப்போம்
அத்தனையும் புதைந்து போனதய்யா
உந்தன் அழகான
புன்னகை முகத்தை தொலைத்து விட்டு
அமைதியற்று வாழ்கிறோமே
உங்கள் பிரிவால் துயருடன் வாழும்
குடும்பத்தினர்.
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute