யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை மயூரா பிளேஸை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசன்பிள்ளை குகதாசன் அவர்கள் 17-04-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி முருகேசன்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி முத்துக்குமாரசாமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ரஞ்சினி அவர்களின் அன்புக் கணவரும்,
லலிதாம்பிகை(ஜேர்மனி), ரவிசாந்தி, சுரேஷ்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, சுப்பிரமணியம், மதியாபரணம், நாகபூசணி, கமலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜான், சிவகுமார், நிரஞ்சனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவகுமார், சுலோச்சனாதேவி, சகுந்தலாதேவி, பத்மினி, நிர்மலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரவினா, அக்ஷனா, கிருத்திகா ஆகியோரின் அன்பு பாட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Ambihai , Jane , Ravisanthi & Siva family & Suresh & Niranjani family , we are saddened to hear about the passing away of Sithappa. Please accept our heartfelt condolences. We hope you find the...