Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
உதயம் 27 OCT 1975
அஸ்தமனம் 25 JUN 2023
அமரர் முருகராஜா ஸ்ரீகாந் 1975 - 2023 வல்வெட்டித்துறை தீருவில், Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வல்வெட்டித்துறை தீருவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட முருகராஜா ஸ்ரீகாந்த் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.  

மூன்று ஆண்டுகள் கடக்கிறது ஆனால்,
மூன்று நாட்கள் போல் தெரிகிறது
உங்கள் நினைவு!
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் - உங்கள்
உறவுக்கு நிகரில்லை யாருமே சகோதரனே!

உரிமைகொள்ள ஆயிரம்
உறவுகள் இருந்தாலும் உள்ளத்தை புரிந்து
கொள்ள உம்மைப் போல் எவரும்
இல்லை எங்கள் அருகினில் சகோதரனே.. 

நீ தந்த சந்தோஷ தருணங்களிற்கு
வேறு எந்த உவமையும் இணையாய்
எங்களுக்கு விளைந்து போகாது 

நீ இல்லாத உலகம் இருள் சூழ்ந்த
முழு வெறுமையை அன்றி வேறெதையும்
தந்து போகாது
ஆண்டுகள் எத்தனை போனாலும்
நீ எம்மோடு பேசிய கதைகள்
நம் நெஞ்சை விட்டு அகன்று போகாது 

உன் நினைவுகள் தரும் கண்ணீர்
இவ்வுலகில் நாம் வாழும் வரைவற்றிப் போகாது

அம்மாவின் கண்களில் கண்ணீர் ஓடுகிறது,
ஐயாவின் இதயம் அமைதியின்றி துடிக்கிறது.
 உன் சிரிப்பை தேடி வீடு முழுதும் அலைகிறோம்,
ஆனால் உன் குரல் இனி கேட்கவில்லை.  

உன்னை இழந்த துயரம்
வார்த்தைகளால் சொல்ல முடியாது;
உன் நினைவுகள் மட்டும் எங்கள்
 வாழ்நாள் முழுவதும் துணையாக இருக்கும்.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்..!

தகவல்: குடும்பத்தினர், உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள்