Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 11 MAR 1960
இறப்பு 21 MAY 2021
அமரர் முருகர் விக்னேஸ்வரன் 1960 - 2021 கண்டாவளை, Sri Lanka Sri Lanka
Tribute 22 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

கிளிநொச்சி கண்டாவளையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், பின்லாண்ட், புளியம்பொக்கனை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முருகர் விக்னேஸ்வரன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

அணையாத தீயினில்
அலையான சுவாலையாய்
ஐந்து வருடங்களாகியும்
அனல் கக்கி எரியுதையா 

எங்கள் அப்பாவே உங்கள் நினைவுகள்
அன்பின் அடையாளமே அரவணைப்பின் உதாரணமே
பண்பின் திருவுருவே பாசத்தின் இலக்கணமே
நேசத்தின் பிறப்பிடமே நிறைந்திட்ட குல விளக்கே

நீர் மறைந்துபோன நாளன்று
உறைந்துதான் போனோம்
இன்னும் உடைந்துதான் போகின்றோம்

உருக்குலைந்து மாய்கின்றோம்
வருடங்கள் ஐந்து வந்திட்ட போதினிலும்
நம்ப மறுக்கிறதையா எங்கள் மனங்கள்

உம் நல்ல முகம் மறைந்ததென்று
சொல்ல முடியவில்லை எம் சோகத்தை
மெல்ல முடியவில்லை உம் நினைவுகளை

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!  

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Fri, 21 May, 2021
நன்றி நவிலல் Sat, 19 Jun, 2021