3ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
3
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மிருசுவில் உசனைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bestwig ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முகுந்தன் சின்னையா ஆனந்தம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
இடியென வந்தசெய்தி எம்
இதயத்தில் இறங்கி உயிர்நாடி வரை
அது ஊர்ந்து சென்றதுவோ
இனி எங்கே காண்போம் உம்மை!
கனிவான உன் பார்வையும்
புன்னகை தவழும் உன் பூமுகமும்
இன்று அடங்கிப் போனது
கதிகலங்கி நிற்கின்றோம்..
உங்கள் அன்பு முகம் மறைந்தாலும்
அழியாது நினைவலைகள்!
கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே
உங்கள் முகம் எந்நாளும்
உயிர் வாழும் அப்பா!
எம்மையெல்லாம் மீளாத்துயில் கொண்டு
ஆறாத்துயரில் ஆழ்த்திச் சென்றுவிட்டார்
கலையாத நினைவுகளுடன்
உதிரும்
கண்ணீர் பூக்களால் அர்ச்சித்து
கண்ணீர்
காணிக்கையாக்குகின்றோம் !
தகவல்:
குடும்பத்தினர்