யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மடுத்தீன் பாக்கியநாதர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீர் விழி தோய!
நீங்கா நினைவுகள் மிளிர நின்
பிரிவின் காலம் ஓராண்டு ஆனது ஐயா !!!
ஐயா என்று நாம் அழைக்க
நீங்களில்லாத துயரம்.
பாசமாய்எங்களை வளர்த்த பாசத்தி்ன்
பிறப்பிடமே, பார்க்குமிடமெல்லாம்
எங்கள் பார்வையுள் தெரிகின்றீர்கள்
காலங்கள் கடந்து சென்றாலும்
ஒவ்வொரு நொடிகளிலும் இதயத்தின்
துடிப்பைப் போல் அருகிலே
நீங்கள் வாழ்வதை நாம்
உணருகின்றோம்.
இக் கணமும்உங்கள் நினைவால் துயருகின்றோம்
அறிவூட்டி சீராட்டி வளர்த்த தந்தையே !
அன்பான அறிவு தந்து
அரவணைத்து மகிழ்ந்தவரே !!
எம் துயரம் புன்னகை சிந்தும்
உங்கள் முகத்தைக் காண
நித்தம் நித்தம் ஏங்கித் தவிக்கிறோம்
ஐயா..!!
நீங்கள் விட்டுப் போன வெற்றிடத்தில்
எதை இட்டு நிரப்புவோம்
கல்லறைப் பூக்களோடு எங்கள்
கண்ணீரும் பூத்துக்கிடக்கிறது!
எம் நெஞ்சுக்குள் வாழும் உங்கள்
நினைவுகள் எப்போதும் கலைந்து போகாது!
அன்போடும் பாசத்தோடும் அரவணைத்த
எங்கள் அன்புத் தந்தையே!
எங்களை விட்டுப் பிரிந்ததேன்
கண்முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும்
எம்முன்னே உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும் ஐயா!!
அன்புத் தந்தையே
உங்கள் ஆன்மா இறைவன் சந்நிதியில்
நித்திய இளைப்பாற்றியை அடைந்திட இறை அருள் கொண்டு
பிரார்த்திக்கின்றோம் !!
உங்கள் பிரிவால் ஈர விழிகளுடன் துயருறும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்,
உற்றார் உறவினர்கள்.
அன்னாரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக 15-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 07:30 மணியளவில் மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.
Dear Friends, We don’t know what to say except that we love you. May you find comfort in knowing that your dear one is safe in the memory of God, who will remember every detail about him and bring...