எக்காளம் முழுங்கும் போது
இறந்தோர் அழிவற்றவர்களாய்
உயிருடன் எழுப்பப்படுவர் நாமும்
மாற்றுரு பெறுவோம்
1. கொரி- 15:51
யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வதிவிடமாகவும், இத்தாலியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மிக்கேல் ஸ்ரிபன் ஜோஜ் அவர்களின் கண்ணீர் அஞ்சலி. இத்தாலியில் 1994 ஆம் ஆண்டில் இறந்த இவரது திருவுடல் 25ம் ஆண்டு நிறைவில் 06-04-2019 சனிக்கிழமை அன்று இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட உள்ளது.
அன்னார், காலஞ்சென்ற மிக்கேல், ஞானப்பு தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சின்னப்பு, அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பற்றிமா ராணி அவர்களின் அன்புக் கணவரும்,
சுபோதினி, தர்ஷினி, யூட்சன் ஆகியோரின் ஆசைத் தந்தையும்,
ரஜனி, சாந்தி, வெனிசியா, காலஞ்சென்ற கருணாநிதி, ஜீவானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அன்ரன், டக்ளஸ், வசந்தா, காலஞ்சென்ற அமலதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அஞ்சலா மெய்யநாதன், சாந்தி கண்ணதாஸ், பீலிக்ஸ் கெங்கா, தேவிகா ரவீந்திரன், பிபியா துரைச்செல்வம் , அம்புறோஸ் தயா, அன்ரன் சமிளா, லொறேற்றா கிருஸ்ணகாந்த், காமலீற்றா பேரழகன் ஆகியோரின் அன்பு அத்தானும்,
ஜனகன், நெல்சன், றெவோனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
செயோன், மேவின், ஆரன், அபிஷேக், அனஸ்கா, எலைஜா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 06-04-2019 சனிக்கிழமை , 07-04-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அதனைத்தொடர்ந்து 08-04-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் சாவகச்சேரி புனித லிகோரியார் தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித லிகோரியார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
My condolence to your family